நாள்தோறும் நமது உணவில் லவங்கம், மஞ்சள், தக்காளி, கொத்தமல்லி இலை போன்றவற்றை சேர்த்துவந்தால், கெட்டக்கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.
இருவகைகள் கொண்ட லவங்கப்பட்டையில், சுருள் பட்டை நம் உடல் எடை குறைப்பை தூண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம் உடம்பில் உள்ள வளர்சிதை மாற்ற பிரச்சனையை சரிசெய்து தேவையில்லாத கொழுப்பை குறைக்க உதவும். இலவங்கப்பட்டை நேரடியாக சாப்பிட வேண்டாம், டீயில் போட்டு காலை வெறும் வயிற்றில் பருகுங்கள். கொலஸ்ட்ரால் நல்ல குறையும். மஞ்சள் பல நோய்களை குணமாக்க உதவி செய்யும். நம் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பை குறைக்க மஞ்சள் உதவுகிறது. நாள்தோறும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது அதில் மஞ்சள் கலந்து அருந்தினால் உடலில் உள்ள நச்சுககள் வெளியேறும். நோயெதிர்ப்பு மண்டலம் கூட வலுவாகும்.
வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், புரதங்கள் மிகுந்து காணப்படும் தக்காளியில் நார்ச்சத்தும் கொஞ்சம் உள்ளது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் கெட்ட கொழுப்பை நன்கு குறைக்கும். கொத்தமல்லி இலை கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவும். இதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க கொத்தமல்லி செம்ம தேர்வு. இதில் காணப்படும் நார்ச்சத்துக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத குணம் கொண்டது. நாள்தோறும் உணவில் கொத்தமல்லி இலை எடுத்து கொள்ளலாம். கொத்தமல்லி இலையை ஜூஸாக அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் அருந்தலாம். இந்த உணவை தவிர சியா விதை, அவகேடோ ஆகியவையும் கெட்ட கொழுப்பை கரைக்க ரொம்ப உதவியாக இருக்கும்.