உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் கடன் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.
பல சமயங்களில் உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு பெனாலிட்டி மற்றும் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். இதனை ஓரளவு எளிதாக்குவதற்கு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உங்களுக்கு EMI ஆப்ஷனை வழங்குகிறது. இதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள தொகையை நீங்கள் ஒவ்வொரு மாதமும் தவணையாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்களது கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது.
பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி
இந்த பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி மூலமாக உங்களுடைய தற்போதைய கிரெடிட் கார்டு கடன்களை மற்றொரு கிரெடிட் கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். தற்போது நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டில் அதிக கடன் இருக்கும் பட்சத்தில் வேறொரு வங்கியின் கிரெடிட் கார்டுக்கு இந்த நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். ஆனால், அப்படி செய்வதற்கு முன் அதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பர்சனல் லோன்
ஒருவேளை உங்களுடைய கிரெடிட் கார்டில் எக்கச்சக்கமான கடன்களை வைத்திருக்கிறீர்கள் என்றால் EMI மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் தவிர ஒரு பர்சனல் லோன் எடுப்பது நல்ல ஆப்ஷனாக இருக்கும். வழக்கமாக கிரெடிட் கார்டு கடனில் வசூலிக்கப்படும் வட்டியை காட்டிலும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். கிரெடிட் கார்டில் அதிகளவு கடன் வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.
Read More : ஜூன் 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!