இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் மக்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் பருமன். வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக மக்கள் துரித உணவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர், இது உடல் பருமன் அதிகரித்து மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் போன்றவை வர காரணமாக அமைந்து விடுகிறது. இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிமையான பானம் எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
ஆப்பிள் சிடர் வினிகர் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய ஒரு பொருளாகும். தினமும் இதில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த வினிகரில் பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அமினோ அமிலங்களும் நிறைந்து இருக்கின்றன. இதனை பயன்படுத்தி எவ்வாறு உடல் எடையை குறைக்க உதவும் பானம் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அதில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இந்த பானத்தை தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து ஃபிட்டாக இருப்பதை உணரலாம்.
இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு உதவுவதோடு வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமலும் தடுக்கிறது. மேலும் உடலில் இருந்து தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியேறவும் பசியை கட்டுப்படுத்தவும் துணை புரிகிறது. நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு முகப்பொலிவிற்கும் காரணமாக இருக்கிறது.