fbpx

என் தங்கச்சியையே போட்டோ எடுக்குறியா?… கிண்டல் செய்த இளைஞரை அடித்தே கொன்ற அண்ணன்!… திருச்சியில் பரபரப்பு!

திருச்சியில் ஓடும் பேருந்தில் தங்கையை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்த இளைஞரை அண்ணன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்த ஸ்டீபன் சந்தானம் என்பவரின் மகன் லூர்து ஜெயக்குமார் (29). இவர் தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே மாந்துரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பேருந்தில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு பணிகளை முடித்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்ததாகவும் அப்போது பேருந்தில் இருந்த லூர்து ஜெயக்குமார் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் அவரது அண்ணன் குப்புசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குப்புசாமி அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு கபிரியேல்புரம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அங்கு பேருந்திலிருந்து இறங்கிய லூர்து ஜெயக்குமாரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் லால்குடி காவல் நிலையம் அழைத்துச் சொல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் மாந்துரை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகில் வைத்து கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். இதில் லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லால்குடி போலீசார், லூர்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் குப்புசாமியை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடையதாக மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.

Kokila

Next Post

உலகில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரங்களின் பட்டியல்!... இந்திய நகரங்கள் என்னென்ன தெரியுமா?

Thu Apr 20 , 2023
2023 ஆம் ஆண்டின் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் உலக நகரங்களின் புதிய பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பட்டியல், டிசம்பர் 31, 2022 இல் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நகரங்களை வரிசைப்படுத்தியது. இதில் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சீனா, லண்டனைத் தவிர, முதல் 10 இடங்களில் […]

You May Like