fbpx

நீங்க மட்டும் தான் கொண்டாடுவீங்களா.., நாங்களும் கொண்டாடுவோம்..! அதிமுக கூட்டணி முறிவை பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து நன்றி_மீண்டும் வராதீர்கள்!” என்ற வாசகத்துடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த பாஜக கூட்டினியில் இருந்து அதிமுக விலகுகிறது என்ற அறிவிப்பு வெளியனதை அடுத்து அதிமுகவினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இதுகுறித்து எங்களுடைய தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று கூறினார். இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவை அதிமுகவினர் கொண்டாடுவதை போன்று, பாஜகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை திருநெல்வேலி பாஜக கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய பாஜக கட்சியினர் கொண்டாடினர். மாநில தலைவரே இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்லாமல் இருக்கும் நிலையில், பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது

Kathir

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 27-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்...! இதற்கு மட்டும் அனுமதி உண்டு...

Tue Sep 26 , 2023
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரம் கிராமத்தில் இன்று அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 20-வது நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி நிகழ்ச்சி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் 27-ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் […]

You May Like