பேரிச்சம்பழத்தை வைத்து சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம். இந்த மில்க் ஷேக் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்பது நிபுணர்களின் டிப்ஸ்.
நம்மில் பலருக்கும் பேரிச்சம் பழம் பிடிக்கும். ஏனெற்றால், பலரும் பேரிச்சம் பழத்துடன் தான் அன்றைய தினத்தை துவங்குவோம். இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் அவ்வளவு பெரியது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். அதுமட்டும் அல்ல, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கும். அப்படி ஆரோக்கிய நன்மைகள் பல கொண்ட பேரிச்சம்பழத்தை வைத்து சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பால் – 2 கப், பேரீட்சைப்பழம் – 15, பாதாம் – 1/4 கப், முந்திரி பருப்பு – 1/4 கப், பிஸ்தா – 1 ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன், பால் – 500 லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது), தேன் – 1 ஸ்பூன், குங்கும பூ – 1 சிட்டிகை. செய்முறை : பேரீட்சைப்பழ மில்க் ஷேக் செய்ய, முதல் நாள் இரவே பாதாமை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பால், விதை நீக்கி நறுக்கிய பேரீட்சைப்பழம், ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். அடுத்து அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பால் நன்றாக வெந்ததும் ஆறவிட்டு, மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதில், தேன், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து ப்ளேன்ட் செய்தால், சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்.