பால் வியாபாரம் என்பது இந்தியாவில் அதிக வருமானத்தை பெற்றுத் தரும் மிகப்பெரிய சந்தையாக பார்க்கப்படுகிறது. டெய்ரி நிறுவனங்களிடம் இருந்து டீலர்ஷிப் அல்லது ஃபிரான்ச்சைஸ் பெறுவதன் மூலமாக நாம் பெரிய அளவில் வருமானத்தை ஈட்ட முடியும். இந்தியாவில் பல்வேறு விதமான பால் சார்ந்த பொருட்களை 1946 முதல் அமுல் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து ஃபிரான்சைஸ் எப்படி பெறுவது என்பதற்கான செயல்முறையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முன்னணி டெய்ரி ப்ராடக்டு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் அமுல் நிறுவனம், அதன் ஃபிரான்ச்சைஸ் உரிமையாளரிடம் இருந்து லாபத்தில் எந்த ஒரு பங்கையும் பெற்றுக் கொள்வதில்லை. இந்த பாலிசியின் காரணமாகவே இந்தியாவின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருக்கக்கூடிய ஏராளமான நபர்கள் அமுல் ஃபிரான்சைஸ் உரிமையை வாங்குவதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்த பாலிசியை தவிர ப்ராடக்டுகள் கமிஷன் முறையில் கிடைப்பதையும் நிறுவனம் உறுதி செய்கிறது. இதன் மூலமாக அமுல் ப்ராடக்டுகளை விற்பனை செய்யும் ஃபிரான்சைஸ் உரிமையாளர் அதிக லாபத்தை சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் அமுல் 2 வகையான ஃபிரான்ச்சைஸ்களை வழங்குகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து ஃபிரான்ச்சைஸ் வாங்குவதற்கு உங்களிடம் ஒரு கடை அல்லது போதுமான நிலம் இருக்க வேண்டும். நிறுவனத்திடம் இருந்து ஃபிரான்சைஸ் பெறுவதற்கு இந்த தேவைகளை ஒருவர் கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும். அமுல் விற்பனை நிலையங்கள், பார்லர்கள் அல்லது கியாஸ்குகள் மற்றும் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லர்கள் ஆகிய 2 வகையான ஃபிரான்சைஸ்களை நிறுவனம் வழங்குகிறது. அமுல் விற்பனை நிலையம் பார்லர் அல்லது கியாஸ்க்கு ஃபிரான்சைஸ் பெற நினைக்கும் நபர் குறைந்தபட்சம் 150 சதுர அடி கொண்ட ஒரு கடை பெற்றிருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஐஸ்கிரீம் பார்லர் ஃபிரான்சைஸ் உரிமை பெற நினைக்கும் நபர் குறைந்தபட்சம் 300 சதுர அடி இடத்தை கொண்டிருக்க வேண்டும். அமுல் நிறுவனத்திடம் இருந்து ஒரு ஃபிரான்ச்சைஸ் பெறுவதற்கு நீங்கள் முதலில் www.amul.com என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். இதில், தேவையான அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். விற்பனை நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் பிற தேவையான தகவல்களை நீங்கள் retail@amul.coop என்ற இமெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.
Read More : உலகளவில் மாஸ் காட்டும் இந்திய பொருட்கள்..!! வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி..!! பிரதமர் மோடி புகழாரம்..!!