fbpx

உங்கள் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா?… தவிர்க்க சில வழிமுறைகள்!

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதற்கான வழிகள் குறித்து பார்க்கலாம்.

பாலினம் மற்றும் மரபணு ஆகிய இரண்டுமே குழந்தை பருவத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான பழக்கம் உருவாவதற்கான காரணமாக அமைகிறது. 3 வயது மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பெண்களைக் காட்டிலும் ஒரு சில ஆண்கள் வளர்ந்த பிறகும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். இதில் குடும்ப வரலாறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குழந்தையின் பெற்றோர் உடன் பிறந்தோர் அல்லது மிகவும் நெருக்கமான நபருக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்குமாயின் அந்த குழந்தைக்கும் அதே பழக்கம் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

பகல் நேரத்தில் உங்கள் குழந்தைக்கு தேவையான திரவங்களை கொடுக்கவும். உங்கள் பிள்ளை வழக்கமான முறையில் கழிப்பறையை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகல் நேரத்தில் 5 முதல் 7 முறை சிறுநீர் கழித்திருக்க வேண்டும். படுக்கைக்கு செல்லும் முன்பு கட்டாயமாக உங்கள் பிள்ளை சிறுநீர் கழித்து விட்டதா என்பதை கவனியுங்கள்.

உங்கள் குழந்தை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கழிப்பறையை பயன்படுத்தும் பொழுது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏதேனும் பரிசுகளை வழங்கவும். மெத்தை மற்றும் போர்வை மீது வாட்டர் ப்ரூஃப் கவர்களை பயன்படுத்தவும். இரவு நேரத்தில் அவர்கள் கழிப்பறையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சூழலை அமைத்துக் கொடுங்கள்

Kokila

Next Post

திடீர் திருப்பம்...! அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு திங்கட்கிழமை விசாரணை...!

Sun Sep 10 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வரும் திங்கள் கிழமை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு செப்டம்பர் 11ஆம் தேதி முதன்மை அமர்வு நீதிபதி எஸ் அல்லி முன் […]

You May Like