fbpx

திருமண நிகழ்ச்சியில் சாப்பிடுவதற்கு தட்டு தர தாமதமானதால் தகராறு..!! கேட்டரிங் ஊழியர் அடித்துக் கொலை..!!

டெல்லி மாநிலம் பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இசை கச்சேரிக்கு மியூசிங் பேண்ட், உணவு பரிமாறுவதற்கு கேட்டரிங் சர்வீஸ் போன்றவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது, கேட்டரிங் சர்வீஸை சேர்ந்தவர்கள் விருந்தாளிகளுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். தட்டுக்கள் கழுவும் பணிகள் நடைபெற்றதால், உணவு பரிமாற தட்டுக்கள் வர தாமதமானது. இதற்கிடையே, இசைக் குழுவை சேர்ந்தவர்கள் சாப்பிடுவதற்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு வந்தனர். இசைக் குழுவை சார்ந்த சிலர் கேட்டரிங் ஊழியரான சந்தீப் சிங்கிடம் உணவு பரிமாற தட்டுக்களை கேட்டுள்ளனர். தட்டுக்களை கழுவிக் கொண்டிருப்பதால் சிறிது தாமதமாகும் என சந்தீப் சிங் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த இசைக் குழுவினர் சந்தீப் சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிப் போகவே தகராறாக மாறியது. இசைக் குழுவை சார்ந்தவர்கள் பிளாஸ்டிக் தட்டுக்களால் சந்தீப் சிங்கை சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சந்தீப் சிங்கை அவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவத்தில் இசைக் குழுவை சார்ந்த 4 பேர் ஈடுபட்டதாகவும், இருவரை கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள மீதமுள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

மாஸ் காட்டிய அஸ்வின், ஜடேஜா..!! 117 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா..!!

Thu Feb 9 , 2023
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் […]

You May Like