fbpx

அசத்தல் அறிவிப்பு…! மாதம் தோறும் இவர்களுக்கு ரூ.3,500 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…?

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500, அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மார்ச் 27-ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சீனாவில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி!... பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை!... அச்சத்தில் மக்கள்!

Sun Mar 12 , 2023
சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், […]

You May Like