fbpx

இ-சேவை தொடங்க ரூ.6,000 கட்டணம் செலுத்தினால் போதும்…! எப்படி விண்ணப்பிப்பது…? ஆட்சியர் தகவல்…!

இ-சேவை மையம் தொடங்க ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புறத் தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி, மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகின்றது.

மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி, பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ என்ற திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இயலும். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ / https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளைப் பயன்படுத்தவும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 14-ம் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் 3,000 ரூபாய் ஆகும். நகர்ப்புறத்திற்கான கட்டணம் 6,000 ரூபாய் ஆகும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தினமும் காலையில் எழுந்தவுடன் இதை செய்தால் போதும்.. இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்..

Sun Mar 26 , 2023
ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன. எனவே உங்கள் இதயத்தை […]

You May Like