fbpx

செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது…

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாமற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.

மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள்டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் பூனியா, பேட்மிண்டனில் லக்‌ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது கிர்க்கெட் வீரர் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்தம் போட்டியில் ராஜ்சிங் ஆகியோருக்கு விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயாந்த் சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டது. இவ்விருதானது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு வழங்கப்படும்  விருதுகள் ஆகும் . விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை வரும் 30-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

Next Post

தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்… 7 பாடப்புத்தகங்கள் தயார்…

Mon Nov 14 , 2022
தமிழில் மருத்துவ படிப்பிற்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை 7 பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,  “முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் […]
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையா..?? அமைச்சர் சொன்ன மிக முக்கிய தகவல்..!!

You May Like