fbpx

ஆயுத இறக்குமதி!… சர்வதேச அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா!… புள்ளி விவரங்கள் இதோ!…

சர்வதேச அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக சுவீடன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்த அறிக்கையை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் ‘சிப்ரி’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2018-22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சவுதி அரேபியா 9.6%, கத்தார் 6.4%, ஆஸ்திரேலியா 4.7%, சீனா 4.6% எகிப்து 4.5%, தென்கொரியா 3.7%, பாகிஸ்தான் 3.7%, ஜப்பான் 3.5%, அமெரிக்கா 2.7% ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடந்த 2013-17 மற்றும் 2018-22-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவீதம் குறைந்திருந்த போதிலும், இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பதாகவும், இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 14 சதவீதம் இறக்குமதியை அதிகரித்திருப்பதும், அதற்கு அதிகமான ஆயுதங்களை வழங்கும் நாடாக சீனா இருப்பதும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் ஆயுத ஏற்றுமதியில் முதல் 5 இடங்களை முறையே அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து 16% ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% என நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா மட்டும் 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரஷ்யா 45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. பிரான்ஸில் இருந்து 29%, அமெரிக்காவிடம் இருந்து 11% ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

Kokila

Next Post

ஒருநாளில் 1 கிலோ எடை குறையுமாம்!... இந்த லெமனேட் டயட் டிரை பண்ணுங்க!... டிப்ஸ்!... செய்முறை இதோ!

Thu Mar 16 , 2023
பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன. அந்தவகையில், ஒரு மிக எளிதான வழி மூலம் ஒரு நாளில் 1 கிலோ எடை குறைக்க சில எளிய டிப்ஸை இந்த தொகுப்பில் பார்க்கலாம். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. இதனால், தற்போது அதிக இன்னல்களுக்கு ஆளாவதற்கு ஒரே காரணம் உடல் பருமன். இதனை […]

You May Like