fbpx

ஒரே நேரத்தில் சுமார் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்..! கதிகலங்கிய பள்ளி நிர்வாகம்..!

ஒரே நேரத்தில் சுமார் 110 மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் வத்ராப்நகர் ஏக்லவ்யா குடியிருப்பு பள்ளியில் 240-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. திடீரென பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் மோசமடைந்தது. தகவலறிந்த மாவட்ட சுகாதாரத்துறையினர், வத்ராஃப்நகர் சிவில் மருத்துவமனையில் 60 மாணவர்களை அனுமதித்தனர். அவர்களில் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சுமார் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்..! கதிகலங்கிய பள்ளி நிர்வாகம்..!

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் தீபக் நிகுஞ்ச் கூறுகையில், ”பள்ளி மற்றும் மருத்துவமனையில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 110 மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது” என்றார். ஆனால், மாணவர்கள் தரப்பில் பள்ளியின் விடுதியில் சுத்தமும், அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், அறைகள் பற்றாக்குறையால், 4 அறைகளில் 240 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

Chella

Next Post

கஞ்சா செடியை ஊடுபயிராக வளர்த்த விவசாயி; கைது செய்த போலீசார்..!

Tue Aug 9 , 2022
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய தோட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பக்கத்தில் இருக்கும் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீரன்கொட்டாய் கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக, மகேந்திரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி, காவல்துறையினர் வீரன்கொட்டாய் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மாதையன்(48) என்பவர் அவருடைய விவசாய […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like