fbpx

முக்கிய பிரமுகர்கள் வருகை..!! தலைமை பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!!

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னை வந்திருந்தார். அப்போது, மின்சாரம் தடைபட்டது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அளித்த விளக்கத்தில், ”போரூர் துணை மின்நிலைய உயர்மின் அழுத்த பதையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.34 முதல் 10.12 மணிவரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்று வழியில் மின்விநியோகம் செய்யப்பட்டது” என கூறினார்.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்சார வாரிய அதிகாரிகள் நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது நிகழ்வு நடைபெறும் இடங்களில் மின்சார வாரிய பொறியாளர்கள், ஊழியர்களும் பணியில் இருக்கவும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இலாகா தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#Breaking..!! பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை..!! முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ’குற்றவாளி’ என தீர்ப்பு..!!

Fri Jun 16 , 2023
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பி-யிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்துக் கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]

You May Like