தமிழ் சினிமாவின் மேதை என புகழ்ந்தாலும் அதற்குரிய பெருமை கொண்டவர் தான் இளையராஜா. ஆனால், அவருக்கு தன் திறமைக்கு ஏற்ப திமிரும் அதிகமாகவே இருக்கும். அவர் பேசினாலே ஒரு வம்பை விலைக்கு வாங்கி விடுவார். அப்படி அவர் செய்த சில சேட்டைகளை பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டியொன்றி தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், இளையராஜாவுக்கு தன்னடகம் என்பதே இல்லை. அவர் எப்போதுமே திமிராக சுற்றி வருவார். அவர் படத்தில் இசையமைத்தால் அதில் நம்மால் குறையே சொல்ல முடியாது. அவர் போடுவது தான் பாட்டு. இதனால் அவரிடம் ஒரு 5 பாட்டை வாங்கி அதனுடன் கொஞ்சம் சீனை ஷூட் செய்து படம் எடுத்து வென்ற காலம் எல்லாம் இருக்கிறது.
24 மணி நேரத்தில் 20 மணி நேரம் பாட்டு போட்டு கொடுத்து உழைத்தவர். தீபாவளி தினத்தில் 3 படம் கூட முடித்து கொடுத்துள்ளார். இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் ஒப்பிட்டு பார்த்தால் இளையராஜாவை கை எடுத்து கும்பிடலாம். வைரமுத்து கூட இளையராஜாவிடம் சண்டை போட்டுவிட்டே வெளியேறினார். அவர் எல்லாரிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் ஒருவரை தவிர. அது அவரின் குரு பஞ்சு அருணாச்சலம் தான். ஒருநாள் நாங்க சில பத்திரிகையாளர் சேர்ந்து அவர் சரஸ்வதி பூஜை பேட்டிக்காக சென்றிருந்தோம். அப்போது அவரிடம் சில சமூக கேள்வி முன் வைத்தோம்.
ஆனால் எனக்கு தெரியாது. நான் பத்திரிகையே படிப்பதில்லை என திமிராகவே பேசினார். அப்போ அங்கிருந்த பஞ்சு அருணாச்சலம் இவர்களால் தான் நீ இங்க இருக்க. உன்னை இளையராஜாவாக முடிசூடாமல் ராஜாவாக்கியது இந்த செய்தியாளர்கள் தான் என்றார். அதை தொடர்ந்து அவர் எங்க கால்களை தொட்டு வணங்கினார். அவருக்கு திமிரு இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஞானி, மேதை. நான் அவரை அப்படி தான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.