அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் இதுவரை பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதுவரை 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், 14 கிலோ இன்னும் மீட்கப்பட்டவில்லை. முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதை அடுத்து அவரை பிடிக்க சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றியுள்ள 20 சோதனை சாவடிகள் போலீசார் உஷார்படுத்தப்படுத்தி தீவிர வாகன சோதனை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வங்கி கொள்ளையில் முக்கியான முருகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.