fbpx

Vikiravandi By Election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு.. தற்போதைய நிலவரம்?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீதம் (30,667 பேர்) வாக்களித்துள்ளனர்.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு  விக்கிரவாண்டியிலுள்ள 138 வாக்கு சாவடி மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குபதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 12.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளன.

.

English Summary

As of 10 am, 25% voting has been recorded in the Vikravandi assembly constituency by-election.

Next Post

”இந்த சின்ன பையன் என்ன செய்யப்போகிறேன் என்பதை பாருங்கள்”..!! ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அண்ணாமலை வழக்கு..!!

Wed Jul 10 , 2024
A compensation of Rs 1 crore has been demanded from RS Bharati. The money so collected will be given to families affected by alcohol poisoning in Kalakurichi.

You May Like