fbpx

Global TV Market: 18 ஆண்டுகளாக சாம்சங் நிறுவனம் முதலிடம்.! வெளியான அறிக்கை.!

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து 18வது ஆண்டாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான கடந்த ஆண்டு வருவாயின் அடிப்படையில் உலக தொலைக்காட்சி சந்தையில் 30.1 சதவீதத்தை விற்பனையை கொண்டிருக்கிறது. மேலும் 2006 முதல் உலக தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான QLED டிவிகள் அதிக அளவில் விற்பனையாகி சாம்சங் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றுவதற்கு உதவியதாக ஓம்டியா ஆய்வு நிறுவனம் தனதா அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் QLED டிவிகள்8.31 மில்லியன் யூனிட் விற்பனையானதாக அந்த ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது.

2017 ஆம் ஆண்டில் QLED தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 44 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. 2500 அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கு அதிகமான மதிப்புள்ள டிவிகளின் விற்பனையில் 60.5 சதவீத பங்கை சாம்சங் கொண்டு இருக்கிறது. இந்த விற்பனை கடந்த ஆண்டு 48.3 சதவீதமாக இருந்தது.

மிகப்பெரிய தொலைக்காட்சிகளுக்கான சந்தையிலும் சாம்சங் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய டிவி விற்பனையில் சாம்சங் கடந்த ஆண்டு 33.9 சதவீத விற்பனையை பெற்று இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் நியோ க்யூஎல்இடி என்ற 98 இன்ச் அளவிலான மிகப்பெரிய டிவி வலுவான விற்பனையை சந்தையில் பெற்று இருக்கிறது.

English Summary: As per reports Samsung Electronics maintaining its number one ranking in the global tv market for eighteenth continuous years.

Next Post

கவனம்...! ரேஷன் பொருட்கள் கடத்தல்... உடனே இந்த இலவச எண்ணுக்கு புகார் தெரிவிக்க வேண்டும்...!

Tue Feb 20 , 2024
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் […]

You May Like