fbpx

தொடங்கிய பருவமழை… அனைத்து பள்ளிகளுக்கும் இது கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாளர்கள் பாதுகாப்புசார்ந்து வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், மற்றும் சுற்றுச்சுவர் எதேனும் இருப்பின் அவற்றை உடன் அற்றிட உரிய வழிமுறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை அடையாளம் குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்த வேண்டும். அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்தி, பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், வளாகங்களில் ஆழ்துளைக்கிணறுகள் இருந்தால் அது பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாடில்லா ஆழ்துளைக்கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்புத்தொட்டிகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பைத் தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளியில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் தரைதளத்தில் வைக்கப்பட்டிருப்பின் மழை நீரினால் சேதம் ஏற்படாவகையில் பாதுகாப்பாக வேறு தளங்களில் மாற்றி பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேல் தளத்தில் தடைப்பட்ட வடிகால்கள், மாடிப் படிக்கட்டுகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

செம சான்ஸ்… மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை…! இன்று முதல் Hall Ticket வெளியீடு...! வெளியான முக்கிய அறிவிப்பு...!

Fri Oct 7 , 2022
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். […]

You May Like