வரும் பிப்ரவரி மாதத்தில் அதிகமான நாட்கள் வங்கிகள் விடுமுறை இருப்பதால், உங்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை இடையூறுகள் இல்லாமல் மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுவது அவசியம். அதேநேரம் வங்கி விடுமுறை என்பது மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் நேரடியாக செயல்படாது என்றாலும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ (UPI) சேவைகள் போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும். இருப்பினும், தொடர் விடுமுறைகள் காரணமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதில் சில இடையூறுகளை ஏற்படுத்தக் கூடலாம்.
பிப்ரவரி 2025 மாதம் வங்கி விடுமுறை நாட்கள் விவரங்கள் :
பிப்ரவரி 2, 3, 2025: வசந்த பஞ்சமி / சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதால், பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 11, 2025: தமிழ்நாட்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 12, 2025: குரு ரவிதாஸ் ஜெயந்தியை அடுத்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 15, 2025 : லுய்-நை-நி (Lui Ngai Ni) விழா கொண்டாடப்படுவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. இது மணிப்பூரின் நாகா பழங்குடியினரால் அனுசரிக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு முதல் இந்த கொண்டாட்டம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 19, 2025: சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 20, 2025: அருணாச்சலப் பிரதேச மாநில நாள் / மிசோரம் மாநில நாள் கொண்டாடப்படுவதால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. 1987 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக இருந்தது மாநிலங்களாக மாறியதை நினைவுக்கூரும் நாளாகும்.
பிப்ரவரி 26, 2025: தமிழ்நாடு, புது தில்லி, பீகார், கோவா, மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி உட்பட மாநிலங்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது.
பிப்ரவரி 8, 22, 2025: இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது.
பிப்ரவரி 2, 9, 16, 23, 2025: அனைத்து ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வங்கிகள் செயல்படாது.