fbpx

‘அஸ்வின் ஒரு விஞ்ஞானி’ – ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சேவாக் ட்வீட்

அஸ்வின் ஒரு விஞ்ஞானி என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்திருப்பது இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அஸ்வின் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி. இந்த சூழலில் அஸ்வினை ‘விஞ்ஞானி’ என சொல்லி ட்வீட் செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.


வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு 8-வது விக்கெட் ஜோடியான ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் காரணமாக இருந்தனர். 145 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 74 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு சென்றது. இருவரும் சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பெற வைத்தனர். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 12 ரன்னும், 2-வது இன்னிங்சில் 42 ரன்னும் எடுத்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்.

2-வது இன்னிங்சில் அஸ்வின் எடுத்த 42 ரன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த நிலையில், “அருமையான இன்னிங்ஸ் ஆடினார் அஸ்வின். ஸ்ரேயாஸ் ஐயருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ இது கிடைத்துவிட்டது” என சேவாக் ட்வீட் செய்துள்ளார். இவரது ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Kokila

Next Post

இந்தியாவில் மீண்டும் கொரோனா அலையா..? பாதிப்புகள் எப்படி இருக்கும்..? ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்..!!

Mon Dec 26 , 2022
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில், தற்போது சீனாவில் பிஎஃப் 7 (Omicron BF.7) வகை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு […]

You May Like