fbpx

அஷ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக்க வேண்டும்!… தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில விஸஹ்யங்களை பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஆசிய போட்டிகளில் விளையாட B அணியை தான் பிசிசிஐ அனுப்பும் என நினைக்கிறன். இதுபோன்று, இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இல்லையென்றால், ஆசிய போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஷ்வினை நியமிக்க வேண்டும். ஒருமுறையாவது அவரை இந்திய அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்றுள்ளார்.

அதற்கு அஷ்வின் தகுதியான நபர் தான் என மனந்திறந்து கூறினார். மேலும் அவர் கூறுகையில், சென்னை சேப்பாக்கத்தில் தான் உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் போட்டி நடக்கவிருக்கிறது. யாரும் மறந்திடாதீர்கள், ஆஸ்திரேலிய அணியும் மஞ்சள் ஜெர்சியில் தான் விளையாடுவார்கள், அதனால் வழக்கம்போல ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியில் வந்துவிடாதீர்கள், நீல ஜெர்சியை அணிந்து கொண்டு வந்து ஆதரவு தெரிவியுங்கள் என்றுள்ளார். மேலும், தேர்வுக்குழுவின் பணி எளிதானதல்ல. சர்பராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ரஜத் பட்டிதார் போன்றோர் நன்றாக விளையாடி வருகிறார்கள். ஆனால், ஒருவரை அணியில் ஏன் சேர்க்கவில்லை எனக் கேட்கும்போது யாரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். இதனால், தேர்வுக்குழுவின் பணி எளிதானதல்ல, அதனால் தான் அது கடினமான விஷயமாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

Kokila

Next Post

பைக் வாங்கப்போறீங்களா?... நாளை முதல் எகிறும் விலை!... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!... முழுவிவரம் இதோ!

Sun Jul 2 , 2023
இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘Hero MotoCorp’ குறிப்பிட்ட மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை நாளை முதல் சுமார் 1.5% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையில் கூறியதாவது, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, Splendor, Glamour, Pleasure, Passion pro மற்றும் பிற மாடல்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஹீரோ […]

You May Like