தம்புல்லாவில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் இலங்கை தனது முதல் மகளிர் ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 166 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணித்தலைவர் சாமரி அத்தபத்து 43 பந்துகளில் 61 ஓட்டங்களுடன் முன்னிலை வகித்தார், அதைத் தொடர்ந்து ஹர்ஷித சமரவிக்ரம 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்று அணி வெற்றி பெற காரணம் ஆனார்.
18.4 ஓவர்களில் 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 60 ரன்களும், ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ரன்களும் சேர்த்தனர். இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி சச்சினி நிசன்சலா மற்றும் சாமரி அதபத்து தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவரில் 2விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஆசிய கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்தது. இலங்கை ஆசிய கோப்பையை கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.
2024 மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை இந்தியா முழுமையாக வீழ்த்திய அதே வேளையில், இரண்டாவது அரையிறுதியில் கடைசி ஓவர் த்ரில்லில் பாகிஸ்தானை இலங்கை தோற்கடித்ததால், இரு அணிகளும் போட்டியில் தோல்வியின்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. டி20 ஆசிய கோப்பையை நான்கில் மூன்று முறையும், ஒருநாள் தொடரை நான்கு முறையும் இந்தியா வென்றுள்ளது.
ரூ.25,000 ஊதியத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!