fbpx

ஆசிய கோப்பை சூப்பர்4!… கடைசி பந்தில் ட்விஸ்ட்!… வெளியேறியது பாகிஸ்தான்!… பைனலில் இந்தியா-இலங்கை மோதல்!

ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில், கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தில் இலங்கை அணி த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் பைனலில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.

கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர்-4′ போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளி பெற்றிருந்த நிலையில், பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கின. இருப்பினும் மழை குறுக்கிட்டதால், 2 மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக, தலா 45 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான பகர் ஜமான், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் பாபர் அசாம், அப்துல்லாவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்த போது பாபர் (29), வெல்லாலகே சுழலில் ‘ஸ்டம்டு’ ஆனார். தனஞ்ஜெயா பந்தில் சிக்சர் அடித்த அப்துல்லா, ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். இவர் 52 ரன் எடுத்து, பதிரானா ‘வேகத்தில்’ சரிந்தார். தொடர்ந்து மிரட்டிய பதிரானா, ஹாரிசையும் (3) விரைவில் வெளியேற்றினார். தீக் ஷனா சுழலில் நவாஸ் (12) போல்டானார்.

பாகிஸ்தான் அணி 27.4 ஓவரில் 130/5 ரன் எடுத்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. 20 நிமிடத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கிய போது, 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. போட்டி தொடங்கியதும் ரிஸ்வான், இப்திகார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. அதன்படி, ரிஸ்வான் 86, ரன்கள், இப்திகார் 47 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்தது. பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தவகையில் இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டில் 91 ரன்கள், சமரவிக்ரமே 48 ரன்கள், நிசாங்கா 29 ரன்கள், குசால் பெரேரா 17 ரன்கள் அடித்தனர்.

கடைசி இரு பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய சூழலில், 5வது பந்தில் பவுண்டரி அடித்த அசலங்கா, கடைசி பந்தில் 2 ரன் எடுத்து, இலங்கை அணி வெற்றி பெற உதவினார். 42 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசலங்கா (49 ரன்) அவுட்டாகாமல் இருந்தார். தோல்வியால் பைனலுக்கு முன்னேற முடியாமல், பாகிஸ்தான் அணி வெளியேறியது. வரும் 17ம் தேதி நடைபெறும் பைனலில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000!… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

Fri Sep 15 , 2023
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில் […]

You May Like