ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவருக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது.. அந்த பெண் கேபிசி மூலம் லாட்டரி வென்றதாகவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையையும் அவருடன் தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.. மேலும் பல்வேறு கட்டணங்களில் தொகைகளை டெபாசிட் செய்யும்படி அந்த நபர் அறிவுறுத்தினார். வங்கி மேலாளர் என்ற கூறிக்கொண்டு சிலர் பணம் அனுப்பும்படி பேசி உள்ளனர்.. வெவ்வேறு கட்டணங்கள் என்ற பெயரில் மொத்தம் ரூ.39 லட்சத்தை அனுப்பிய அவர், பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
பெண் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய ஐதராபாத் நகர சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்ததாக பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்கள், 73 டெபிட் கார்டுகள், 30 சிம்கார்டுகள், 11 வங்கிக் கடவுச்சீட்டுகள், 2 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கேபிசி லாட்டரி போன்ற லாட்டரிகள் மற்றும் தெரியாத நபர்களால் அறிவிக்கப்படும் அதிர்ஷ்டக் குலுக்கல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது..