ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக 37 பந்துகளில் இப்ராஹிம் சர்தான் 35 ரன்கள் எடுத்துள்ளார் ரஹ்மானுல்லா குர்பஸ் , ஹசரத்துல்லா 21 ரன்களும் , எடுத்தனர். கரீம் 15 ரன் எடுத்தார் நஜிபுல்லா 10 , ரோஷித்கான் 18 ரன்கள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 20 ரன்கள் எடுத்தார். பக்கார் ஜாமன் 5 ரன்எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இப்திகர் அகமது 30 ரன்களும் , ஷாதப் கான் 36 ரன்களும் , முகமது நவாஸ் 4 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் ஒரு ரன்கூட எடுக்காமல் ஒரே பந்தில் அவுட் ஆனது பாகிஸ்தான் ரசிகர்களை சோகமாக்கியது. இதே போல குஷ்தில்ஷா 3 பந்துகளில் 1 ரன் எடுத்தநிலையில் அவரும் அவுட் ஆகி வெளியேறினார். 7 வதாக குல்திஷ் வெளியேறிய நிலையில் 8 வதாக களமிறங்கிய ஹரீஷ் ரவுப் ஒரே பந்தில் அவுட் ஆனார். 18.5 ஓவர்களில் ஆசீப் அலி சிக்சர் அடித்து ரன்களை கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 ரன்கள் எடுத்து அவரும் வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் – திணறிய பாகிஸ்தான்
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் வெறும் 129 ரன்கள் தான் எடுத்தது. இது பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவது போல என நினைத்திருந்த நிலையில் ஆப்கன் வீரர்கள் பரீத் அகமத் , ஃபசல்லக் பரூக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் திணறியது. இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நூலிழையில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

திரில் வெற்றி
6 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் நசீம்ஷா களமிறங்கினார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர். 19.2 ஓவர்களில் நசீம்ஷா அடித்த ஒரு சிக்சரால் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.