நெல்லை அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் பற்றி இன்ற் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார்.. அப்போது “
அதிமுக நிர்வாகி இளங்கோ, நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது..
அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளங்கோ, 2 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை தாக்கியதாகவும், அந்த முன் விரோதத்தின் காரணமாக சஞ்சய் இந்த கொலை திட்டத்தை தீட்டி உள்ளது தெரியவந்தது.. இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கௌதம், அருண்குமார், கணேசன், வெங்கடேசன் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்தனர்.. இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி.. இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
அதே போல், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிலரின் பற்களை ஏஎஸ்பி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.. காவல்நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் இந்த அரசு எந்த வித சமரசத்தையும் மேற்கொள்ளாது.. அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திர கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.. முழுமையான விசாரணை அறிக்கை வந்த உடன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்..
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில், சாதி மோதல் தொடர்பான கொலை சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது.. திமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்பதையும், கொலையாளிகள் கைது செய்யப்படுகின்றனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..