fbpx

வடமாநில இளைஞர்களுக்காக மட்டும் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அசாம் புரோக்கர்!… சென்னையில் அதிர்ச்சி!

வடமாநில இளைஞர்களுக்காக மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநில புரோக்கரை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 3வது மாடியில் அடிக்கடி இரவு நேரங்களில் சந்தேகப்படும் வகையில் வடமாநில வாலிபர்கள் வந்து செல்வதாக உதவி ஆணையர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 2 இளம்பெண்களை வைத்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கரான ரகிபுல் இஸ்லாம் (30) என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரகிபுல் இஸ்லாமை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட புரோக்கரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரபல பாலியல் புரோக்கர் ஜலினா பேகம் (எ) சொப்பனா மும்பையில் இருந்தபடி கடந்த 2 ஆண்டுகளாக, ரகிபுல் இஸ்லாம் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்காக ஒவ்வொரு வாரமும் 2 முதல் 3 இளம்பெண்களை மும்பையில் இருந்து அவர் அனுப்பி வந்துள்ளார். அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வராதபடி வடமாநில வாலிபர்களுக்காக மட்டுமே இவர்கள் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிரபல பெண் பாலியல் புரோக்கர் ஜலினா பேகம் (எ) சொப்பனாவை கைது செய்ய விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Kokila

Next Post

காலிஸ்தானிகளுக்கு எதிராகப் பேசியதற்காக பஞ்சாப்பில் தனது படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன!… கங்கனா ரணாவத் குற்றச்சாட்டு!

Sat Sep 23 , 2023
காலிஸ்தானிகளுக்கு எதிராகப் பேசியதற்காக பஞ்சாபில் தனது படங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகை சேர்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறும் நடிகைகளுள் ஒருவர். நெப்போட்டிஸம் குறித்து எழுந்த பிரச்சனைகள், ஒரு பிரபல நடிகரின் தற்கொலை குறித்து எழுந்த பிரச்சனை என பல விஷயங்கள் குறித்த கருத்துக்களை கூறி அடிக்கடி ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம். இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி […]
’சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் இவரா..? வெளியான மாஸ் அப்டேட்..!!

You May Like