fbpx

குட் நியூஸ்…! 75% மேல்‌ மதிப்பெண்‌ பெற்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…! அரசு அதிரடி உத்தரவு…!

அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3,78,000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கவுகாத்தியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது.

இந்த திட்டம் குறித்து அசாம்‌ முதல்வர்‌ ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது ; 9ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ரூ.167.95 கோடி செலவில்‌, 3.76 லட்சம்‌ சைக்கிள்கள்‌, மேல்நிலை தேர்வுகளில்‌ 75% மேல்‌ மதிப்பெண்‌ பெற்றவர்களுக்கு சைக்கிள் இலவசமாக வழங்கும்‌ திட்டத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்‌.”எங்கள்‌ அமைச்சரவையின்‌ இந்த முடிவு கல்வியை மேம்படுத்துவதற்கும்‌, மாணவர்களின்‌ திறனுக்கு சிறகுகளை வழங்குவதற்கும்‌ பெரும்‌ ஊக்கமாக இருக்கும்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை!... புதிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

Thu Jul 6 , 2023
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க 12 மாத காலம் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு […]

You May Like