மாணவர்களுக்கு சைக்கிள் மட்டும் வழங்காமல், அவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கூடுதல் உபகரணங்களுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள்களில் நிறம் முதல் உபகரணங்கள் வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாணவிகளுக்கான சைக்கிள்கள் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும், மாணவர்களுக்கான சைக்கிள்கள் ராணுவ பச்சை நிறத்திலும் தயாரிக்கப்பட உள்ளன. சைக்கிளுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுவதால், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும்போது […]