fbpx

’நிர்வாணமாக்கியும், படுக்கவைத்து பிறப்புறுப்பில் மிதித்தும் தாக்குதல்’..!! FIR-இல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிபுரிந்த பட்டியலின பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், குழந்தைக்கு உணவு தயாரிப்பதில் தாமதமானதால் மெர்லினா துன்புறுத்தலை தொடங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். துணியில் சிறு கரை இருந்தால் அடித்தும், சமைக்க தெரியாதென்று சொன்னால் பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர்.

தனது தாயை பார்க்க வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் நிர்வாணமாக்கி தாக்கியதாகவும், படுக்கவைத்து பிறப்புறுப்பில் மிதித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ மகனும் துடைப்பத்தால் அடித்ததாகவும், அடிக்கடி ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

திரும்பிய இடமெல்லாம் வானவேடிக்கை!… தீபாவளியாக மாறிய ராமர் கோவில் திறப்பு விழா!… ரூ.500 கோடிக்கு பட்டாசு விற்பனை!

Tue Jan 23 , 2024
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாடுமுழுவதும் வானவேடிக்கை, தீபங்கள் ஏற்றி மக்கள் பெரும் உற்சாகத்துடன் தீபாவளியை போல் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகமே திரும்பி பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை நடத்தினார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறைசார் நட்சத்திரங்கள் […]

You May Like