fbpx

அசால்ட்!. அலுவலகத்தில் புகுந்த பாம்பை கையால் பிடித்த பெண்!. வைரலாகும் வீடியோ!

Snake: சத்தீஸ்கரில் அலுவலகத்தில் பதுங்கியிருந்த பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண், அஜிதா பாண்டே அசால்டாக பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,

சத்தீஸ்கர் மாநிலம், பில்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதனால் ஊழியர்கள், பாம்பு மீட்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண் அஜிதா பாண்டே, பாம்பை அசால்டாக பிடித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் பாம்பை கைகளால் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அஜிதா அலுவலகத்திற்குள் நடத்து செல்கிறார். அப்போது ஊழியர்கள் பாம்பு அங்கு அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களுக்கு பின் மறைந்திருப்பதாக கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்ற அஜிதா, பாம்பு எங்கே என தேடுகிறார். அப்போது ஒருவர், “பாம்பு தாவி தாக்க வாய்ப்புள்ளது, பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறுகிறார். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத அஜிதா, பாம்பை வெறும் கைகளால் அசால்டாக பிடிக்கிறார். பிறகு அங்கிருந்த சாக்கு பையில் பாம்பை எடுத்து போட்டுக்கொண்டு நடந்து செல்கிறார்.

“இந்த பாம்பு விஷமற்றது. இது எலி அல்லது பூச்சிகளை பிடிக்க இந்த இடத்திற்கு வந்திருக்க கூடும். யாரும் பயப்பட வேண்டாம்” என்று பாண்டே தெரிவித்துள்ளார். அந்த பாம்பு உங்களை கடிக்க முயற்சிக்கவில்லையா என ஊழியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாண்டே, “இல்லை, அதை நீங்கள் தொந்தரவு செய்யாததால் அது மிகவும் அமைதியாக உள்ளது” என சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார்.

அஜிதாவின் இந்த துணிச்சலான செயல் மற்றும் தெளிவான பேச்சை கண்டு அங்கிருந்தவர்கள் அவருக்கு கை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்கள், ஆனால் இந்த பெண்ணோ மிகவும் அசால்டாக பாம்பை பிடித்து செல்கிறாரே என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

Readmore: பிரதமர் முத்ரா யோஜனா திட்டம்!. இவர்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கடன் கிடைக்கும்!.

English Summary

Woman Catches Snake Hiding In Office With Bare Hands In Chhattisgarh, Video Goes Viral – WATCH

Kokila

Next Post

தூள்...! இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.15,000 மாணவர்களுக்கு வழங்கப்படும்...! முழு விவரம்

Tue Jul 30 , 2024
Applications are invited to participate in the Tirukkural siege competition for school students.

You May Like