fbpx

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ரத்து..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1996 – 2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, குற்றத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2009ஆம் ஆண்டு ஆறுமுகம், கோவிந்தன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீர ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கிவிட்டது. மேலும் இந்த வழக்கு காலதாமதமானது எனக் கூறி நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நரசிம்மா அடங்கிய அமர்வு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 வரப்போகுது..!! அமைச்சர் சொன்ன செம குட் நியூஸ்..!!

Wed Nov 29 , 2023
தமிழ்நாட்டில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இது தமிழ் மாதத்தில் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொங்கலுக்கு தேவையான பொருட்களுடன் சேர்ந்து வேஷ்டி, சேலை மற்றும் ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் […]

You May Like