fbpx

#சென்னை: இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம், துணை பேராசிரியர் நடுரோட்டில் செய்த செயல்..!

சென்னை மாநகரில் அடையாறு பகுதியில் பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . புகாரில் , ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தன்னை ஒருவர் இடித்து கீழே தள்ளியதாகவும், அதன் பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் எனவும் கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உதவி ஆணையர் பிராங்கிளின் ரூபன் தலைமையில் உதவி ஆய்வாளர் நிர்மல், மணிமாறன் உள்ளிட்டோர் தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடிய நிலையில் சரவணனை நேற்று கைது செய்தனர்.

சிசிடிவி காட்சியில், சரவணன் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தை தூக்கி நிறுத்தும் சரவணன், தன்னை நல்லவர் போல காட்டிக் கொண்டு அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சரவணன் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி அருகில் இருந்த இரும்பு கேட்டில் தலையை மோதி தாக்குதல் நடத்திவிட்டு, பிறகு எந்த சலனமும் இன்றி சாவகாசமாக அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

போலீசார் அளித்துள்ள தகவலின்படி கைதானவரின் பெயர் தமிழ்ச்செல்வன் என்கிற சரவணன் என்பது தெரிய வந்ததுள்ளது. மேலும் இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Baskar

Next Post

122 ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு மழை..!!

Sat Nov 12 , 2022
சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் […]

You May Like