fbpx

10,000 குவாட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள சிறுகோள்..!! பூமியில் விழுந்தால் என்ன ஆகும்..? நாசா சுவாரஸ்ய தகவல்..!!

எல்லையற்ற பிரபஞ்சம், பல விசித்திரமான விஷயங்களுக்கு தாயகமாக உள்ளது. மனிதனின் அறிவுத்திறன் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், பிரபஞ்சத்தின் பல மர்மங்கள் தீர்க்கப்பட்டாலும், இன்னும் பல மர்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மர்மங்களில் ஒன்று 16 Psyche எனப்படும் கிரக துண்டு. செவ்வாய் மற்றும் வியாழன் கோளுக்கு இடையே 16 சைக் என்ற மிகப்பெரிய உலோக சிறுகோளை தாக்கும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது.

இதுவரை இந்த பணி சிறுகோள் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த உலோக சிறுகோள் 10,000 குவாட்ரில்லியன் டாலர்களுக்கு சமமான இரும்பு, நிக்கல் மற்றும் தங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு குவாட்ரில்லியன் என்பது என் ஒன்றுக்கு அருகில் 15 பூஜ்யங்கள் ஆகும். ஒரு குவாட்ரில்லியன் டாலரின் இந்திய ரோப்பையின் மதிப்பில் 83,280,000,000,000,000 ஆகும்.

இந்தக் கணக்கீட்டில் 10,000 குவாட்ரியன்கள் டாலர் என்றால் எத்தனை கோடி கோடிகள் என்று பிரத்தியேகமாகச் சொல்லத் தேவையில்லை. இந்த சிறுகோள் பூமிக்கு வந்தால் அது மிகப்பெரிய அறுவடையாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சிறுகோளில் இருந்து கிடைக்கும் விலைமதிப்பற்ற இரும்பு மற்றும் தங்கத்தால், பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர் ஆகலாம்.

நாசாவின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் உருளைக்கிழங்கு வடிவத்தில் உள்ளது. இதன் விட்டம் 226 கி.மீ. இந்த சிறுகோள் பொதுவாக பாறை அல்லது பனிக்கட்டியாக இருக்கும். ஆனால், விஞ்ஞானிகள் 16 Psyche இரும்பு மற்றும் தங்கத்தால் நிறைந்துள்ளது என்கின்றனர். இந்த சிறுகோளின் வரலாற்றைப் பொறுத்தவரை, இது மார்ச் 17, 1852 அன்று அன்னி பேல் டி காஸ்பரிஸ் என்ற வானியலாளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கிரேக்க தெய்வமான Athena Psyche-ன் நினைவாக இந்த சிறுகோள் 16 Psyche என்று பெயரிடப்பட்டது. கடந்த 2022இல் தனது ஆராய்ச்சியைத் தொடங்கிய நாசா, 2026ஆம் ஆண்டுக்குள் சிறுகோளை அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராத காரணங்களால், ஏவுதல் 2023-க்கு ஒத்திவைக்கப்பட்டது. நாசா இந்த வாரம் சைக் விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த பணி எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chella

Next Post

ஆதார் கார்டை வைத்து இப்படி ஒரு மோசடியா..? மக்களே இதை கவனமா நோட் பண்ணுங்க..!!

Mon Oct 16 , 2023
அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கிக் கணக்கு, ஆதார், பான் கார்டு சார்ந்து தான் பல குற்றங்கள் நடந்து வருகின்றன. அதாவது, உங்களுடைய மொபைல் எண்ணிற்கோ, வாட்ஸ் அப் மூலமாகவோ லிங்கை அனுப்பி, தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுமாறு கூறப்படுகிறது. இந்த வகையான மோசடிகள் ஆபத்துகள் நிறைந்தவை. அதனால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களது முக்கிய தகவல்களை உள்ளிடுவது மூலம் பண மோசடி மற்றும் […]

You May Like