fbpx

அடேங்கப்பா..!! ஒரே வாரத்தில் 1,200 முறை நிலநடுக்கம்..!! குலுங்கிய ஜப்பான்..!! பீதியில் மக்கள்..!!

தீவுநாடான ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்தில் சுமார் 30 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இதனால் மேலும் பல நிலநடுக்கம் ஏற்படலாம் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

Chella

Next Post

கொலீஜியம் அமைப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு!… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல்!

Tue Jan 9 , 2024
நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், தேசிய நீதிபதி நியமன ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.இந்த சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி, அதனை கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பிறகு, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசு […]

You May Like