fbpx

அடேங்கப்பா..!! இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 49.72 கோடி; பெண் வாக்காளர்கள் 47.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேர் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தவர்களை விட வரும் லோக்சபா தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதாவது, கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, இந்தியாவில் 89.6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது சுமார் 7 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக பதிவு செய்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முதல் முறையாக வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 88 லட்சத்துக்கு 35 ஆயிரம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

2026இல் விஜய் தான் முதல்வர்..!! இதுவே நமது இலக்கு..!! தொண்டர்களுக்கு நம்பிக்கையை விதைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

Fri Feb 9 , 2024
நடிகர் விஜய் தன்னுடைய சினிமாவை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விஜய்யின் இந்த அதிரடி செயலை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ரஜினி – கமலுடன் ஒப்பிட்டு தளபதியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். காரணம், ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாகவே அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போக்கு காட்டியது மட்டுமின்றி, அரசியல் குறித்து அறிக்கை உள்ளதாக […]

You May Like