திப்பு சுல்தானின் வாள் லண்டனில் 140 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சமரசம் செய்யாமல் தனது கடைசி மூச்சு வரை போராடியவர் முகலாய மன்னர் திப்பு சுல்தான். சிறந்த போர் வீரராக கருதப்பட்ட அவரை மைசூரின் புலி என்று அழைக்கப்படுகிறார். 18ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடி வீர மரணத்தை தழுவினார். இவரது மறைவுக்கு பிறகு அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய ஆட்சியின் போது அவை இங்கிருந்து லண்டனுக்கு கொண்ட செல்லப்பட்டன. முகலாயர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன.
இந்நிலையில், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் போர் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம் போனது. இதன் மூலம் அறிவிக்கப்பட்ட தொகையைவிட 7 மடங்கு அதிகமாக ஏலத்திற்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது. இதுதொடர்பாக போன்ஹம்ஸ் ஏல நிறுவனத்தின் சார்பாக ஏலத்தை நடத்தியவரான ஆலிவர் ஒயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னர் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களிலேயே அவரது வாள் சிறந்ததாக கருதப்படுகிறது. 1782 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கைப்பிடியில் தங்கத்தால் ‘மன்னரின் வாள்’ பொறிக்கப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அந்த வாள், லண்டன் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு Major General David Baird-க்கு பரிசாக அளிக்கப்பட்டதாக ஏல மையம் தெரிவித்துள்ளது.