Senior voters: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 100 வயதை கடந்த 1049 பேர் ‘சூப்பர் சீனியர்’ வாக்காளர்களாக உள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார், தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி இறுதிக்கட்டத்துடன் முடிவடையும். ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதிகளை உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. மேலும், பிரயாக்ராஜில் உள்ள 46 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில், 1049 பேர் ‘சூப்பர் சீனியர்’ வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் பலர் ஆங்கிலேயர் காலத்தில் அரசியல் ரீதியாகச் செயல்பட்டவர்கள்.
1952ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தலில் இருந்து பல தேர்தல்களைச் சந்தித்து வாக்களித்து வருகின்றனர். இப்போது இந்த வாக்காளர்களின் வயது 100 முதல் 120 வயது வரை உள்ளது. பிரயாக்ராஜ் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 100 முதல் 109 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் ஆண்கள் 414 பேரும், பெண்கள் 440 பேரும் உள்ளனர். 110 முதல் 119 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் மூன்று ஆண்களும் 10 பெண்களும் இருக்கிறார்கள். 120 வயதுடைய வாக்காளர்களில் 44 ஆண்களும் 38 பெண்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடக் காத்திருக்கிறார்கள். பிரயாக்ராஜின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 46,64,519 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 25,27,676 ஆண் வாக்காளர்கள், 21,36,224 பெண் வாக்காளர்கள் மற்றும் 619 திருநங்கைகள் இருக்கின்றனர்.
Readmore: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!