இணையதளத்தில் சணலால் செய்யப்பட்ட ஒரு கட்டில் ரூ 1.1 லட்சத்துக்கும் விற்கப்படும் தகவல் இணையம் ஒரு விசித்திரமான இடம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
அவ்வப்போது நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படும் சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். எடுத்துக்காட்டாக, Amazon இல், ₹25,999க்கு ஒரு பிளாஸ்டிக் வாளி பட்டியலிடப்பட்டது. அதுவும் 28 சதவீத தள்ளுபடியில். இப்போது, நம் நாட்டில் பரவலாக காணப்படு கயிற்றுக் கட்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனைக்கு உள்ளது. Etsy, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இ-காமர்ஸ் நிறுவனம். கயிற்றுக் கட்டிலை ‘மிக அழகான அலங்காரத்துடன் கூடிய பாரம்பரிய இந்திய படுக்கை’ என்று பட்டியலிட்டுள்ளது.
தயாரிப்பு விளக்கத்தின்படி, இந்த கட்டில் கையால் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள ஒரு சிறு வணிகத்தால் அனுப்பி வைக்கப்படுகிறது. விளக்கத்தில் சார்பாயின் அளவு மற்றும் அதன் கைவினைப் பொருளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்திருந்தனர்.