fbpx

அடேங்கப்பா..!! பிசிசிஐ செலுத்தும் வருமான வரி தொகை மட்டும் இத்தனை கோடிகளா..? வருமானம் சொல்லவே தேவையில்ல..!!

கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில் பிசிசிஐ ரூ.1,159 கோடி வரை வருமான வரி செலுத்தியதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ செலுத்திய வருமான வரி விவரங்கள் குறித்து ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பிசிசிஐயின் வரவு, செலவு விவரங்களையும் அவர் பட்டியலிட்டார். அதாவது, கடந்த 2021 – 22 ஆம் நிதியாண்டில் பிசிசிஐ ரூ.1,159.20 கோடியும், 2020 – 21 ஆம் நிதியாண்டில் ரூ.844.92 கோடியும் வருமானவரி செலுத்தியுள்ளது.

மேலும், 2021 – 22ஆம் ஆண்டுகளில் பிசிசிஐ ரூ.7,606 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளது. அதே நேரத்தில் ரூ.3,064 கோடி செலவும் செய்துள்ளது. இந்த செலவிற்கு முக்கிய காரணமே கொரோனா தான். ஏனென்றால், கொரோனா காலகட்டத்தில் போட்டிகள் பயோ பபிள் முறையில் நடத்தப்பட்டதால், செலவுகள் அதிகரித்தது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் பிசிசிஐ வருமானம் ரூ.4,735 கோடியாகவும், செலவு ரூ.3,080 கோடியாகவும் இருந்தது. கடந்த 2019-20 ஆம் ஆண்டுகளில் ரூ.4,972 கோடி வருமானம் ஈட்டியது.

அதுவே கடந்த 2018 -19 ஆம் ஆண்டுகளில் ரூ.7,181 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், ரூ.4,652 கோடி செலவு செய்தது பிசிசிஐ. இதே போன்று 2017-18 ஆம் ஆண்டுகளில் ரூ.2916 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், ரூ.2,105 கோடி ரூபாய் செலவும் செய்துள்ளது. வரும் ஆண்டுகளில் பிசிசிஐயின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2021-22 நிதியாண்டு முதல் ஐபிஎல் ஊடக உரிமை ஒப்பந்தங்களில் Viacom18 உடன் ரூ.23,757.5 கோடி (டிஜிட்டல்) மற்றும் ரூ.1,058 கோடி (மூன்று உலகப் பகுதிகள்) மற்றும் டிஸ்னியுடன் ரூ.23,575 கோடி (தொலைக்காட்சி உரிமை) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் அணிகள் ரூ.4,669 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இதன் ஊடக உரிமை ரூ.951 கோடிக்கு Viacom18 நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருமானத்தில் 38.5% பிசிசிஐக்கு கிடைக்கும். இதன் மூலம் ஓராண்டில் சுமார் ரூ.1,906.34 கோடி வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

Retirement Age | மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் பெரிய மாற்றம்..? மக்களவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

Wed Aug 9 , 2023
நாடு முழுவதும் இருக்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அகவிலைப்படி உயர்த்துவதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60இல் இருந்து 65ஆக உயர்த்தலாம் என்ற தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில், இதுகுறித்து மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய […]

You May Like