fbpx

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! 13 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை…!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்..! முகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள்.., கல்லீரல் கொழுப்பின் அறிகுறி...!

Wed Oct 11 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை, கொழுப்பு கல்லீரல்.. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல் போன்ற சில காரணங்களால் கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இப்படி கல்லீரலில் அதிகபடியான கொழுப்பு சேரும்போது, கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு அதன் செயல்பாடு மந்தமாகிறது. இந்த பிரச்சனையை நாம் கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், […]

You May Like