fbpx

இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…! தமிழகத்தில் கொட்ட போகும் கனமழை…!

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி.!?

Thu Jan 11 , 2024
காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி, தயிர் – 2 தேக்கரண்டி, கருவேப்பிலை, கொத்தமல்லி […]

You May Like