இஸ்ரேல் நாட்டில் திடீரென்று, அத்துமீறி ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமல்லாமல், பல்வேறு பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாகினர். பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது திடீரென்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு, பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இந்தியா இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இப்படி திடீரென்று அத்துமீறி தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பினரை ஒருபுறம் இஸ்ரேல் ராணுவம் துவம்சம் செய்து வருகிறது. ஆனால் மறுபுறமோ, இஸ்ரேல் நாட்டின் அப்பாவி மக்கள் பலர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழக்கிறார்கள். பலர் அவர்களின் உறவுகளை இழந்து அனாதையாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், இஸ்ரேலில் தங்களுடைய 16 வயது மகனை காப்பாற்றுவதற்காக துப்பாக்கி குண்டை குறுக்கே புகுந்து தங்கள் மீது வாங்கிக் கொண்டு, தங்களுடைய மகனை காப்பாற்றி விட்டு, உயிரிழந்த பெற்றோர்களால், பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி நுழைந்து, பல்வேறு நகருக்குள் தங்களுடைய கொடூர தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றன. அந்த விதத்தில், ஷ்லோமி மத்தியாஸ், டெபோரோ என்ற தம்பதிகள், அவர்களது 16 வயது மகனான ரோத்தம் மத்தியாஸ் ஆகியோர் இந்த ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒரு ரகசிய இடத்தில் பதுங்கி இருந்தனர். ஆனாலும் ஹமாஸ் அமைப்பினர் அவர்கள் தங்கி இருந்த பகுதிக்குள் புகுந்து, அந்த குடும்பத்தினர் தங்கி இருந்த ரகசிய இடத்திற்கும் வந்து சேர்ந்தனர்.
பின்பு அவர்கள் மூவரையும் நோக்கி, ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனடியாக தம்பதிகள் இருவரும், தங்களுடைய மகன் மீது துப்பாக்கிக் குண்டு பட்டுவிடக்கூடாது என்பதற்காக குறுக்கே பாய்ந்து, அவர் மீது படவிருந்த துப்பாக்கி குண்டை தங்கள் மீது வாங்கிக் கொண்டனர்.
இந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில், தம்பதிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தங்களுடைய மகனை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் இருவரும் எவ்வளவோ முயற்சித்தபோதும் கூட, அந்த 16 வயது சிறுவனின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதன் பிறகு, அந்த சிறுவன் இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே மருத்துவர்கள் அந்த சிறுவனை காப்பாற்றினர். இந்த சம்பவம் இஸ்ரேல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.