fbpx

நிதி நிறுவன ஊழியர்கள் செய்த அட்டூழியம்… டிராக்டர் ஏற்றி கர்ப்பிணிப் பெண் படுகொலை…!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார். மாதம் தோறும் கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் கடன் தொகை 1.30 லட்சம் பாக்கி இருந்தது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பாக்கி 1.30 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேஷூக்கு நேற்று முன் தினம் பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தில் இருந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் அவரது கிராமத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக மிதிலேஷின் 27 வயது மகளும் உடன் சென்றுள்ளார். மிதிலேஷின் மகள் மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் மிதிலேஷ் பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை தடுக்க மிதிலேஷின் மகள் முயன்றார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி மிதிலேஷின் மகள் மீது ஏற்றியுள்ளனர். டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின் மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த கொலை குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு … 13 பேர் பலி , பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை..

Sat Sep 17 , 2022
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை  என கூறப்பட்டுள்ளதால் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அச்சாம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 13 பேர் […]

You May Like