கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், இந்தப்படத்தில் ராமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தவர் ரவீனா டாண்டன். இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் பத்தர் கே பூல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் தன்னுடைய நடிப்பிற்காக தேசிய விருது, பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை எல்லாம் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ரவீனா மீது தாக்குதல் நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனாவின் வீட்டின் அருகே அவரது காரை ரவீனாவின் ட்ரைவர் நிறுத்த முயன்று இருக்கிறார். அப்போது காரானது, பெண் ஒருவரின் மீது மோதி அவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மேலும் ரவீனாவின் ஓட்டுநர் பாதிக்கப்பட்டவர்களை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்து வெளியே வந்த ரவீனா, அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பலர் ஒன்று கூடி ரவீனாவை தாக்கிய நிலையில், அவர் என்னை அடிக்காதீர்கள் என்று கத்தினார். மேலும் அவரை மொபைல் போனில் படம் பிடிப்பவர்களையும் அவர் வேண்டாம் என்று மறுத்தார். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணை குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன் படி, ரவீனா டாண்டனுக்கு எதிராக தவறான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது ரவீனாவின் கார் யார் மீதும் மோதவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது ஒரு தவறான குற்றச்சாட்டு. நாங்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் பார்த்து விட்டோம். கார் ஓட்டுநர் வண்டியை பின்னோக்கி எடுக்கும் போது, இந்த குடும்பத்தினரும் அங்கு சாலையை கடந்து இருக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சண்டை வெடித்திருக்கிறது. இந்த நிலையில், தன்னுடைய ட்ரைவர் தாக்கப்படுவதை பார்த்த ரவீனா அங்கு சென்று அவரை காப்பாற்ற முயன்று இருக்கிறார். ஆனால் அந்த கும்பல், அவரையும் தாக்கி இருக்கிறது.இந்த மோதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ரவீனா டாண்டன் பொதுவெளியில் இப்படி தாக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Read more ; சென்னையில் ‘பிரேமலு’ பட நடிகையை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ!!