fbpx

Gold Silver Rate : ‘ஜூன் மாதத்தில் அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை’ உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!

2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. எப்போது விலை குறையும் என மக்கள் பலரும் காத்திருந்தனர். இந்த நிலையில் ஜூன் மாதத்தில் சரிய தொடங்கியுள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 வீழ்ச்சி அடைந்தது. இந்த நிலையில் ஜூன் 3ம் தேதியான இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கமான 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 சரிந்து ரூ. 6,666 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 சரிந்து ரூ. 53,328 ஆக உள்ளது. முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.7,136 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,088 என்ற விலையில் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.97.30 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.97,300 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Read more ; Raveena Tandon: KGF பட நடிகை மீது தாக்குதல்!! சத்தம் போட்டு அலறிய ரவீனா டாண்டன்.. நடந்தது என்ன?

English Summary

English summary

Next Post

"அவரால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்" நடிகை ஸ்ருதிஹாசன் எமோஷனல் போஸ்ட்!

Mon Jun 3 , 2024
english summary
ஸ்ருதிஹாசனிடம் குழந்தையாகவே மாறிய கமல்ஹாசன்..!! இணையத்தை கலக்கும் கியூட் ரீல்ஸ் வீடியோ..!!

You May Like