fbpx

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயற்சி செய்த 1760 கிலோ கஞ்சா பறிமுதல்……! மாவோயிஸ்ட் அதிரடி கைது ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை……!

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த முயற்சி செய்த மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் இருக்கின்ற தங்களுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம் அதோடு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கின்ற பாடே என்ற பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம். அந்த பகுதியில் இருக்கின்ற கின்னெகருவு என்ற கிராமத்தில், இருக்கின்ற ஒரு வீட்டில் பல மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினர் ஆகியோருடன் இணைந்து அந்த மலை கிராமத்தில் சுற்றி தேடுதல் வேட்டையின் நடத்தி அந்த கிராமத்தை சுற்றி வளைத்தோம். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் சுந்தரராவ் என்பவரின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், அங்கே பதிக்க வைக்கப்பட்டிருந்த 1760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது எனக்கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் சுந்தரராவ் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என்றும் சொல்லப்படுகிறது. அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், வெடிபொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின் கீழ் 8️ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர் காவல் துறையைச் சார்ந்த முக்கிய அதிகாரிகள்.

Next Post

விஜய் பிறந்தநாள்..!! நள்ளிரவு 12 மணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!! என்ன தெரியுமா..?

Thu Jun 22 , 2023
‘மாஸ்டர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இப்படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்த ஆக்ஷன் […]

You May Like