ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வசிப்பவருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க, சரிபார்க்கக்கூடிய அடையாள எண் ஆகும். ஆதார் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை UIDAI ஆல் உறுதி செய்யப்பட வேண்டும். நமது கவனக்குறைவால் ஆதார் விவரங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நமது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் உதவிக்குறிப்புகளையும் யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை மோசடிகளில் இருந்து உங்களைத் தடுக்க சில குறிப்புகளை பார்க்கலாம்..
ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும்: ஆதார் இருப்பை சரிபார்க்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடுவதன் மூலம், ஆதார் வைத்திருப்பவர்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து உண்மைகளை உறுதிப்படுத்த முடியும். வழங்கப்பட்ட எந்த ஆதார் எண்ணையும் எளிதாக சரிபார்க்க முடியும்.
உங்கள் ஆதார் ஒடிபியை ஒருபோதும் பகிர வேண்டாம்: எந்த இடத்திலிருந்தும் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதற்கான எளிதான மற்றும் நம்பகமான முறை ஆதார் OTP ஆகும். உங்கள் சார்பாக வேறு ஒருவருக்குப் பயன்படுத்த ஒருபோதும் கொடுக்காதீர்கள்.. உங்கள் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்ணையும் ஸ்கேன் செய்து சரிபார்க்கலாம்.
பதிவிறக்கிய பின் ஆதார் ஃபைலை நீக்கவும் : ஏதேனும் பொது கணினியில் இருந்து மின் ஆதாரை பதிவிறக்கம் செய்தால், அதை மாற்றிய பின் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு அதை நீக்குவதை உறுதி செய்து கொள்ளவும். மேலும், ஆதாரை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மட்டும் பதிவிறக்கவும்.
ஆதாரை லாக் செய்யலாம் : ஆதார் வைத்திருப்பவர்கள் தேவைப்படும்போது பயோமெட்ரிக்ஸை எளிதாகத் திறக்கலாம் மற்றும் யாராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஆதாரை லாக் செய்யலாம்.
உங்கள் தொலைபேசி எண்ணைப் புதுப்பிக்கவும்: ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை எப்போதும் புதுப்பித்து வைத்திருப்பது முக்கியம். உங்கள் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களின் சரியான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் எப்போதும் சரிபார்க்கலாம்.